நம் குரல்

Monday, February 15, 2010

சுவடுகள்



யாருமற்ற அறையில்
நான் படித்து முடிக்காத புத்தகத்தின்
திறந்து கிடக்கும் பக்கங்களில்
நிறைந்து வழியும் எழுத்துகளில்
எப்போதோ இறந்துபோன மனிதன்
நடந்துபோன கடற்கரையோர
காலடிச் சுவடுகள்
அவற்றின் ஈரம் மாறாமல்
அப்படியே இருக்கக் கண்டேன்

அறைக்குள் நுழைந்து
புத்தகத்தின் பக்கங்களைப்
படபடக்கச் செய்து
தன் இருப்பை எனக்கு அறிவித்து
என் உடலையும் தீண்டி
வெளியேறுகிறது காற்று

ஒரு கள்வனைப்போல்
எந்த அடையாளமும் வைக்காமல்
வீட்டைத் தூய்மையாகத் துடைத்துவிட்டு
கதவின் வழி வெட்கமின்றி
வெளியேறுகிறோம் நம்மில் பலரும்

No comments:

Post a Comment